முன்னா ( விமர்சனம்.)

நடிகர்கள், நடிகைகள்
சங்கை குமரேசன் ( முன்னா )நியா கிருஷ்ணா ( ஹீரோ தங்கை )
, ரம்யா(சங்கீதா), ராஜு ( ஹீரோ அப்பா ), சிந்து( சக்கு ),கென்னடி( தண்ணிபாம்பு முருகன் ), மற்றும் சண்முகம்,வெங்கட்
தயாரிப்பு – ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் (ராமுமுத்துச்செல்வன்)
பாடல்களுக்கான இசை -டி.ஏ வசந்த்
பின்னணி இசை – சுனில் லாசர்.
ஒளிப்பதிவு – ரவி
நடனம் – கென்னடி, எடிட்டிங் – பத்மராஜ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – சங்கை குமரேசன்.
************************
ஒவ்வொரு தொழிலுக்கும் தர்மம் உண்டு.
ஆனால் இங்கு யாரும் தர்மம் பார்த்து தொழில் வளர்க்கவில்லை.
முன்னா கதையில் தர்மம்-அதர்மம் என இரண்டையும் சொல்லி சாட்டையினால் தங்களையே அடித்துக்கொண்டு …..?
ஆம்,சாட்டையினால் அடித்துக்கொண்டு ஆடிப்பாடி பிழைக்கும் நாடு சுற்றிகளை பற்றிய கதை.
இந்த கூட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ,ஊர் மைனர் ஒருவர்க்கும் காதல் ,சுவை பார்த்து விட்டு எறிந்து விடலாம் என்பது மைனரின் கணக்கு.
லாட்டரி சீட்டினால் கோடீஸ்வரனாகிய இந்த கூட்டத்தை சேர்ந்த ஒரு பெரியவரை கல்யாணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு ஓடுகிறாள் ஒரு மாதரசி.
இந்த இரு சம்பவங்களையும் வைத்து நம்மை சம்பவமாக்கி விடுகிறார் சங்கை குமரேசன் .
வாழ்க வளமுடன்!.