“பிச்சை எடு,திருடு ,அல்லது கடன் வாங்கு! ஆனால் மக்களுக்கு ஆக்சிசன் கொடு!”மத்திய அரசுக்கு நீதி மன்றம் கண்டனம்.

கொரானா அச்சுறுத்தல் .உயர்ந்து வருகிற இறப்பு விகிதம்,மருந்து பற்றாக்குறை, உயிர் காக்கும் ஆக்சிசன் இல்லாமை எல்லாம் சேர்ந்து மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளும் மக்களும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் பிரபலமான தனியார் மருத்துவமனையில் ஆக்சிசன் இல்லை. இதனால் பேராபத்து ஏற்படும் .உடனடியாக ஆக்சிசனைவழங்க அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று மருத்துவமனை டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது .

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மத்திய அரசை கண்டித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.

” நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது அரசின் அடிப்படை கடமை. மத்திய அரசு அதனை சரியாக செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு, திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால் ஆக்சிஜனை கொடுங்கள் “என டெல்லி உயர்நீதிமன்றம் கண்டித்து சொல்லியிருக்கிறது.

அரசு வழக்கறிஞர் “ஒரு நாள் வழக்கை  தள்ளி வைக்கும்படி “கேட்டதும் அதற்கு நீதிபதி “இன்று இரவு ஆக்சிசன் இல்லாமல் யாராவது இறந்தால் நீங்கள் பொறுப்பு ஏற்கிறீர்களா?”என்று கேட்டார்.