கஜினி படத்தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா தொற்று 2 வது அலை தமிழகத்தில் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து திரைப்பிரபலங்களுக்கு ஏற்படும் மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், பாடகர் டிகேஸ் நடராஜன், நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, பாடகர் கோமகன் ஜோக்கர் துளசி உள்ளிட்டோரின் அடுத்தடுத்த மரணங்கள் திரைத்துறையை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி, தனுஷ் நடிப்பில் சுள்ளான், பரத் நடிப்பில் பிப்ரவரி 14 மற்றும் கில்லாடி உள்ளிட்ட படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.