“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி”- முக.ஸ்டாலினை வாழ்த்திய இயக்குனர் பாலா!
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குனர் பாலா, பாலுமகேந்திராவின் பிரதான சீடர்.ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.மாறி விட்ட இன்றைய கால சூழலில் பலரும் சமூக வலைதளங்கள் மீது ஆர்வம் காட்டி வரும் நிலையில், இயக்குநர் பாலாவும் முதன் முறையாக டிவிட்டரில் இணைந்துள்ளார்.
முதல் டிவிட்டே தமிழக முதல் ஸ்டாலினை பாராட்டி பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதைத் தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள்.ஆனாலும் இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம் நன்றிகள் என்றும், வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி- என்ற திருக் குறளையும் குறிப்பிட்டுள்ளார்