சென்னை திரும்புகிறார் ரஜினி!

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொரோன கால நெருக்கடியிலும் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இரவு பகலாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, வேல் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும்  நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த்  சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓரிருநாளில் முடிவடையும் என்கிறது படக்குழு. இதையடுத்து இன்று அல்லது வருகிற மே 13ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புவார்  என்றும், சென்னையில் நடக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்து கொடுத்த பின் வழக்கமான சிகிச்சைக்காக வரும் ஜூன் அல்லது ஜூலையில் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் செல்வார் என்கிறார்கள்