‘தளபதி 65’பட வேலைகளை ‘திடீர்’ என நிறுத்த சொன்ன விஜய்!


விஜய் நடிப்பில்,நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது ’தளபதி 65’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னையில் எம் ஆர் சி நகரில்  ஜார்ஜியாவில் உள்ள மால் ஒன்றின் பிரமாண்டமான அரங்கம் போலவே செட் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் திடீரென அரங்கம் அமைக்கும் பணியை நடிகர் விஜய் ,தயாரிப்பு தரப்பிடம் அப்படியே நிறுத்திவிட சொன்னதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து ‘தளபதி 65’  படக்குழுவினரிடம்   விசாரித்த போது, “தற்போது கொரோனா வைரஸ்2 வது அலையின் பாதிப்பு அதி வேகமாக பரவி வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் காரணத்தாலேயே செட் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தி வைக்கும் படியும், கொரோனா தொற்று பரவல் குறைந்த பிறகு செட் அமைத்துக் கொள்ளலாம் என்றும் விஜய் தயாரிப்புதரப்பிடம் கோரிக்கை வைக்க, இதையடுத்து, பிரமாண்ட  அரங்கம் அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது என்கிறார்கள்.