அரசின் தடையை மீறி படப்பிடிப்பு! போலீசார் அதிரடி சோதனை!!
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக தமிழக அரசின் தடை உத்தரவை மீறி மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருவதாகவும், கடந்த வாரம் இங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் 150 பேருடன் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பூந்தமல்லி தாசில்தார், உதவி கமிஷனர் சுதர்சனம் ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.