படுக்கை அறையில் மனைவியை பந்தாடிய படுபாவி !

பள்ளியறையை படுபாவி ஆசிரியர்கள் பாலுணர்வு பசியாறும் அறையாக மாற்றுகிற அவலத்தை தற்போதுதான் கண்டு பிடித்திருக்கிறார்கள்.அதுவும் ஆட்சி மாறியதால்.!
இல்லையென்றால் அந்த அவலம் இப்பவும் தொடர்ந்திருக்கும்.
சனியன் எக்கேடோ கெடட்டும்.
படுக்கையறையில் கட்டியணைக்க வேண்டிய மனைவியை கழுத்தை நெரித்து ,சுவற்றில் மோதி சித்திரவதை செய்த புருசனைப் பற்றி கேள்விப்பட்டிருகிறீர்களா ?
கேட்கவில்லையென்றால் இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.!
படுக்கை அறை என்றால் என்ன?
கவியரசர் கண்ணதாசன் சொல்கிறார்:
- “ஒரு பட்டு விரித்தாள் ,முல்லை மொட்டு விரித்தாள்.
- தங்கத் தட்டுப்போல அவள் கிடந்தாள் !
- அவன் ஏங்கி வந்தான்; சுகம் வாங்க வந்தான்.
- அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள் ..
- அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
- அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
- அவன் தாங்கிக்கொண்டான்
- நெஞ்சில் வாங்கிக்கொண்டான்” என்கிறார்.
ஆனால் ஒரு நடிகன்,நடிகை வாழ்க்கையில் நடந்ததென்ன?
கரண் மெஹ்ரா. பாலிவுட் நடிகர்.”யே ரிஸ்தா க்யா கெஹ்லதா ஹை “வில் பிரபலமானவர்.
இவரின் மனைவியும் நடிகை. பெயர் நிஷா ராவல்.
மனைவியை அடித்து உதைத்து ,தங்க நகைகளை பறித்துக்கொண்டு போயிருக்கிறார் ,எல்லாமே கள்ளக் காதலிக்காக!
எந்த மனைவிதான் தாங்கிக்கொள்வாள் ?
எதிர்த்துக் கேள்வி கேட்டாள் என்பதற்காக படுக்கை அறைக்குள் மனைவி நிஷாவை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பேர்த்திருக்கிறார் .ரத்தக்காயம்.!
நிஷா என்ன சொல்கிறார் ?
“என் கணவர் நடிகர். ஆள் ஸ்மார்ட். எங்கெங்கே சிசிடிவி கேமராக்கள் எங்கள் வீட்டில் இல்லையோ ,அங்கெல்லாம் என்னை நைய்யப்புடைத்து விடுவார். படுக்கை அறையிலும் பாவி கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டான். மூஞ்சியில் குத்துகிற குத்தில் ரத்தம் வழியும். முகம் கன்றி கருநீலம் பூத்து விடும்.அன்று இரவு படுக்கை அறையில் தலை முடியை இழுத்து சுவரில் மோதி ரத்தம் வழிய அடித்தான்.கழுத்தை நெரித்தார்.இதற்கு பின்னர் தப்பித்து வந்து அவசரப்போலீஸ் 100 எண்ணுக்கு பேசி தகவல் சொன்னேன் . போலீஸ் வந்து அந்த ஆளை அள்ளிக்கொண்டு போய்விட்டது” என்கிறாள் நிஷா.