பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் மரணம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், எல்லாம் இன்பமயம், மகராசன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பழம்பெரும் திரைப்பட இயக்குனர் ஜி.என் ரங்கராஜன் (வயது 90) இன்று காலை 8.45 மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார் . ஜி.என் ரங்கராஜன் மகன் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். இவர், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி,ஹரிதாஸ், வாஹா படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.