அழகான ஆண்குழந்தைக்கு ‘அப்பா’வானார் நடிகர் மகத்!
சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் மகத், வல்லவன்,மங்காத்தா, ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன்,காளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார். தற்போது பிரபுராம் இயக்கத்தில் உருவாகும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, மக்வென் இயக்கத்தில் உருவாகும் இவன்தான் உத்தமன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில், கடந்த ஆண்டு தனது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்ட மகத், தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை சமீபத்தில் வெளியிட்டார் தனது சமூக வலைதளபக்கத்தில், காதல் மனைவி பிராச்சிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார் .இந்நிலையில் நடிகர் மகத், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இவருக்கு சிம்பு உள்ளிட்ட திரையுலகபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.