சமுத்திரகனி, யோகி பாபு நடிப்பில் உருவாகும் “யாவரும் வல்லவரே” !
“வால்டர், பாரிஸ் ஜெயராஜ்” போன்ற படங்களை தயாரித்த 11:11 Production Dr. பிரபு திலக் . தற்போது இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவரது “பார்டர்” படத்தை தனது நிறுவனம் மூலம் வெளியிடவுள்ளார். இந் நிலையில், அடுத்தாக தற்போது N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கத்தில் “யாவரும் வல்லவரே” எனும் புதிய படததை தயாரிக்கிறார்.. இப்படத்தில் சமுத்திரகனி, யோகி பாபு இணைந்து நடிக்க, இவர்களுடன் பல முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.
இது குறித்து பிரபு திலக் கூறியதாவது…
“எங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியகும், அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பார்டர்” விரைவில் வெளியாகவுள்ளது. இந்த தருணத்தில் எங்களின் அடுத்த படைப்பாக “யாவரும் வல்லவரே” படத்தை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஹைப்பர்லிங்க் வடிவில் 4 வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை, இணைத்து சொல்லும் வித்தியாசமான படைப்பு இது. இயக்குநர் N.A. ராஜேந்திர சக்ரவர்த்தி திரைக்கதையை கூறியபோது அவரது ஐடியாவும் படம் குறித்த பார்வையும் மிக வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். மேலும் கதையில் எதிர்பாராத பல திருப்பங்களும், கதையின் போக்கில் அவிழும் பல முடிச்சுகளும் இப்படத்தை பெரிய திரையில் காணும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தின. உடனடியாக இப்படைப்பில் இணைய ஒப்புகொண்டதற்கு இது தான் முதன்மை காரணம். இது தவிர சமுத்திரகனி, யோகி பாபு போன்ற திறமை மிக்க நடிகர்களுடன் இணைந்து நடிக்கவுள்ள தமிழின் முன்னனி நட்சத்திரங்கள் இப்படத்தை ஒரு உயர்ந்த படைப்பாக மாற்றுவார்கள் என நம்புகிறேன் என்கிறார்.
இப்படத்தில் சமுத்திரகனி மற்றும் யோகி பாபு ஆகியோருடன், நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவராசு, போஸ் வெங்கட், மெயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நாதகுமார், ரித்விகா, சைத்தான் அருந்ததி மேனன், மற்றும் தேவ தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழுவில் Jais (ஒளிப்பதிவு), N.R. ரகுநந்தன் (இசை), ராம் ROA (படத்தொகுப்பு), பொன் முதுவேல், தீபா செல்வா, ஆதிராய் (பாடல்கள்), GV.பிரகாஷ்குமார், N.R. ரகுநந்தன், பத்மலதா, மற்றும் லிஜேஷ் குமார் (பாடகர்கள்) ஆக பணியாற்றுகின்றனர்.