‘ஆரம்பிக்கலாங்களா’ வைரலாக பரவும் கமல்-பகத்பாசில் புகைப்படம்!
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இதில் கமலுடன் விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இது ஒரு அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவான மாலிக் திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், உலகநாயகனை ‘மாலிக்’ பகத் ஃபாசில் சந்தித்து பேசியுள்ளார் அப்போது கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பகத்பாசில், ‘ஆரம்பிக்கலாங்களா’ எனவும் பதிவிட்டுள்ளார் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.