நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி!
நவரச நாயகன் நடிகர் கார்த்திக் இன்று உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்த காலிலேயே மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது .சிகிச்சைக்கு பின் கார்த்திக் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்