ஹரி-அருண்விஜய் கூட்டணியில் மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் கதா நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா சரத்குமார், ‘கேஜிஎப்’ கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பழனியில் நடந்து வந்த  நிலையில் திடீரென இயக்குனர் ஹரிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு மற்றும் கொரோனா  ஊரடங்கு ஆகியவைகளால் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அருண் விஜய், ப்ரியா பவானி சஙகர் சம்பந்தமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இராமேஸ்வரம், காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு அறிவித்துள்ள அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு, மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.கிராமத்து பின்னணி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.ஜிவி பிரகாஷ் இசையில் டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.