நம்மவரின் 67வது பிறந்தநாள் விழா!
மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா நாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய கட்சியின் அலுவலகத்தில் கொண்டாடப்படுகிறது இது குறித்து கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு,
நாளை (7.11.2021) காலை முதல் மாலை வரை நாள் முழுவதும், `நம்மவர்’ டாக்டர் கமல் ஹாசனின் 67வது பிறந்தநாள் விழா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பெருமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
காலை 10 மணியளவில் அலுவலகத்தில் பல்வேறு மருத்துவ நிபுணர்களைக்கொண்டு கண் மருத்துவ முகாம், ரத்ததான முகாம், உறுப்புதான முகாம் மற்றும் பல் மருத்துவ முகாம் ஆகியவை நம்மவரால் துவக்கிவைக்கப்படவுள்ளன. தொடர்ந்து கட்சித் தலைமை அலுவலகத்திலும், ராஜ்கமல் திரைப்பட நிறுவன அலுவலகத்திலும் மதிய உணவாக சுமார் 1,500 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.
நாள் முழுவதும் மக்களுக்குப் பயன்தரும் திட்டங்களைச் செயல்படுத்துவதே தனது பிறந்தநாளின் நோக்கம் என எண்ணிச் செயல்படும் நம்மவரை, நாம் அனைவரும் நாள்கூடி வாழ்த்துவோம்… கொண்டாடுவோம்!
நன்றி!
ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம், சென்னை.