உலக நாயகன் கமலஹாசன் இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர்,அரசியல் பிரபலங்கள்,திரையுலகபிரபலங்கள், ரசிகர்கள், என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின்: இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் ‘கலைஞானி’
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
கவிஞர் வைரமுத்து :
எம்.ஜி.ஆர் பற்றிக் கலைஞர் சொன்னதுபோல் கமல் பற்றி நானும் சொல்லலாம்: “என் நாற்பதாண்டுகால நண்பர்” தனிவாழ்வு கலைவாழ்வு பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர் வெற்றி தோல்வி அவரை என்செய்யும்? தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரியும் தீச்சுடர் எரி சுடரே எழு சுடரே!
இயக்குநர் மோகன்ராஜா:
ஹேப்பி பர்த் டே கமலஹாசன் சார். எப்போதும் உங்களின் மிகப் பெரிய ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆர்யா:
மாபெரும் கலைஞர் கமலஹாசன் சாருக்கு அற்புதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்களின் விக்ரம் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை
குஷ்பு:
எனக்கு பிடித்த எனது அருமை நண்பர் கமலஹாசனுக்கு இனிமையிலும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எனது வாழ்க்கையில் எப்போதும் மகவும் ஸ்பெஷலான மனிதர்.
ராதிகா சரத்குமார்:
ஹேப்பி பர்த்டே கமலஹாசன். சினிமாவிலும் எனது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு மனிதர். என்ன ஒரு அற்புதமான பயணம். அதிகமான வலிமையும், இன்பமும் உங்களுக்கு கிடைக்கட்டும்












