சூர்யாவின் கடிதத்தால் ‘நெகிழ்ந்து’போன தொல்.திருமவளவன்!

ஜெய்பீம் திரைப்படம், ‘கலைநாயகன்’ சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய தொண்டுள்ளத்தை, தொழிலறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம் என விடுதலைசிறுத்தைகள்கட்சித்தலைவர் தொல் .திருமாவளவன் நடிகர் சூர்யாவை பாராட்டி பெரிய கடிதம் ஒன்றை  எழுதியிருந்தார்.

அதில், “புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாக திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் முன்வந்ததன் மூலம் தனது சமூக பொறுப்புணர்வையும், முற்போக்கு சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள ‘கலைநாயகன்’ சூர்யாவையும், அதனை உயிர்ப்புடன் படைப்பாக்கம் செய்துள்ள இளம் இயக்குநர் த.செ.ஞானவேலையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டுகிறோம்.

இத்திரைப்படத்தின் வருவாயில் இருந்து ரூ.1 கோடியை பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்திருப்பது நடிகர் சூர்யாவின் பரந்த உள்ளத்தை வெளிப்படுத்துகிறது. சூர்யாவின் சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தொண்டுள்ளத்தை, தொழிலறத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமார பாராட்டுகிறோம்.என குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு சூர்யா நன்றி தெரிவித்து தொல் .திருமாவளவனுக்கு எழுதிய கடிதத்தில், ”பாதிக்கப்படும் மக்களின் பிரச்சனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது மட்டுமே ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கம். கவனப்படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும். ஊக்கமூட்டும் தங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருந்தார்.

இக்கடிதத்தை  பார்த்து நெகிழ்ந்துப்போன திருமாவளவன் அவருக்கு பதிலுக்கு வாழ்த்துச் சொல்லி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பழங்குடியின உரிமைப் போராளி பிர்சா முண்டா பிறந்த நாளில் இவ்வாறு பதிவிட்டுருப்பதற்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்