‘திரெளபதி’ மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன்!
வண்ணாரபேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன்.ஜி,திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களின் மூலம் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இந்நிலையில் இன்று மாலை தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட போவதாக இயக்குநர் மோகன்ஜி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி மோகன்ஜி இன்று மலை தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தபடம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது அடுத்தப்பட நாயகன் இயக்குனர் செல்வராகவன் என்றும், இது தனது வழக்கமான படங்களை போல் இல்லாமல் முற்றிலும் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றும்,மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.,.