கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் 4 படங்கள்!
கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனை ஓன்றில் சிகிச்சை பெற்று வந்த கமல், பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு உடனடியாக ஷங்கரின் இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
இந்தியன் 2 திரைப்படத்தை லைகா பட நிறுவனம் வரும் 2022 தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது என்கிறார்கள்.இதையடுத்து கமல், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாக உள்ள (திரிஷ்யம்-2)ம் பாகம் பாபநாசம்-2ம் பாகம் படத்தில் நடிக்கிறார்..
இப்படத்தை தொடர்ந்து,மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கமல் நடிக்கிறார்.என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தேவர் மகன்’ 2-,ம் பாகமான ‘தலைவன் இருக்கின்றான்’ கதையைத் தான் மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான மகேஷ் நாராயணுக்காக கமல் எழுதி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது..
இயக்குநர், கதாசிரியர், எடிட்டர் என பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் மகேஷ் நாராயணன். ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் தான் இந்த மகேஷ் நாராயணன்.