நெகட்டிவ் ரோலில் ‘அஜித் 61’.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் போனிகபூர்,எச்.வினோத் கூட்டணி யின் 2வது படைப்பாக வெளியாகவுள்ள வலிமை எப்படியும் ஹிட் அடிக்கப் போகிறது என்கிற அதீத நம்பிக்கையுடன் , அப்படத்தின் புரமோஷனை கூட ஒதுக்கி வைத்து விட்டு மீண்டும் இக்கூட்டணி ஏகே 61 படத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.
ஏகே 61 படத்தின் லுக் சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில், அதன் நெகட்டிவ் டார்க் ஷேர் போஸ்டரை தற்போது போனி கபூர் வெளியிட்டுள்ளார்.வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தா உள்ளிட்ட படங்களை த் தொடர்ந்து அஜித் தனது 61 வது படத்திலும் வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளாராம்.