அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் தலைவர் 169 வது
படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கடந்த வாரம் அறிவிப்பு ரஜினியின் புகைப்படத்துடன் வெளியானது.
இப்படத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேஷம் செய்யும் காமெடி புயல் வடிவேலு இப்படத்தில் ரஜினியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திரமுகி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இத்திரைப்படத்தில் இணைய உள்ளனராம்.
தலைவர் 169 வது படத்தின்படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்றும், அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.












