“நடிகையுடன் நடிப்பதற்கு ஹீரோக்கள் பயப்படுகிறார்களா?”

இது பாலிவுட் நடிகையின் எக்காளம் ,ஏகடியம் ..இப்படி எதுவேனும்னாலும் சொல்லிக்கலாம். தலையில துண்டு கட்டிட்டாலே தனக்கு கிரீடம் வைத்துவிட்டதாக குதிக்கிற பயலுவ மத்தியில் இப்படி ஒரு பெண் இருப்பது ஆச்சரியமில்லையே.!

கிரிதி சனான் .நடிகையின் பெயர்.

‘மிமி ‘என்பது அவர் நடித்திருக்கிற படம்.பிளாக் பஸ்டர் பிலிம் என்கிறார்கள்.இந்த படத்தில் வாடகைத் தாயாராக கிரிதி சனான் நடித்திருந்தார். அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதுதான் அவருக்கு தற்போது பிரச்னை !!  மிமிக்கு பிறகு ‘பச்சான் பாண்டே ‘ என்கிற படத்தில் நடிகை நடித்திருக்கிறார்.இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

அப்போது ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஒரு கருத்தை வலியுறுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

“மிமி படத்துக்குப் பின்னர் என்னுடன் நடிப்பதற்கு பெரும்பாலான நடிகர்கள் மறுக்கிறார்கள்.அவர்களுக்குள்ள முக்கியத்துவம் குறைந்து போகும் என பயப்படுகிறார்கள். ஹீரோயின் ஓரியண்டட் கதை என்றாலே அவர்களுக்கு அலர்ஜி “என்கிறார்