காதலருக்கு நயன்தாரா கொடுத்த ‘காஸ்ட்லீ’ பரிசு!
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா,விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக ஒரு வழியாக அறிவித்தனர்.
இதையடுத்து வரும் ஜூன் 9ம் தேதி திருமலையில் நடக்க உள்ள தங்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் இருவரும் நேரில் சென்று பார்த்து வந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகின.
திருமண ஏற்பாடுகள் மிகவும் ஜரூராக நடந்து வரும் இந்நிலையில் தங்களது சொந்த தயாரிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கிய , தனது வருங்கால கணவருக்கு சிகப்பு நிற காஸ்ட்லி ஃபெராரி கார் ஒன்றை பரிசளித்துள்ளார் நயன்தாரா.
சமீபத்தில் விக்னேஷ் சிவன். அந்த காருடன் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
.விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா பரிசாக கொடுத்த அந்த சொகுசு காரின் விலை 7.5 கோடி என்பது தான் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது அஜித் படப்பிடிப்புக்கு நயன்தாரா வாங்கி கொடுத்த காரில் தான் கெத்தாக போய் வர விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் அன்னையர் தினத்தில் நயன்தாரா தனது வருங்கால மாமியாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன்தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ,