வைரமுத்துவின் ‘அன்னம்மா பெத்தவளே’ பாடல் வெளியானது!

பாடலாசிரியர் வைரமுத்துவின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நாட்படு தேறலு’க்காக  100 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இதில்,.100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் மற்றும் 100 இயக்குநர்கள் என வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்களாக இந்த நாட்படு தேறல் உருவாகி வருகிறது.

நாட்படு தேறல் பருவம் 2ன் 4வது பாடலான “அன்னம்மா பெத்தவளே” பாடல் தற்போது வெளியாகி உள்ளது.”மூத்த குடியாள் மகள் ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தது கண்டு அழுது பாடுகிறாள் இளைய குடியாள். ஒரு மகிழ்ச்சி இங்கே துக்கமாகிறது.” என இந்த பாடல் குறித்த விளக்கத்தை கூறியுள்ளார் வைரமுத்து.

இந்த அன்னம்மா பெத்தவளே பாடலுக்கு அய்ஸ் நவ்ஃபாய் ராஜா என்பவர் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் கணேஷ் விநாயகம் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த பாடலை பாடலை  வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமான அபிநய ஸ்ரீ இந்த பாடலில் நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் எடிட் செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் இப்பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.