சாண்டி,விசாகா தீமன்நடிப்பில் உருவான ‘டேஞ்சர் குயின்’!
டேஞ்சர் குயின்’ எனும் வீடியோ இசை ஆல்பத்தில் பஞ்சாப்பை சேர்ந்த நடிகை விசாகா தீமன் நடித்திருக்கிறார்.
ட்ருலி மீடியா அண்ட் என்டர்டெய்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோஷன் நசீர் மற்றும் கணேஷ் தேசிங் இணைந்து தயாரித்திருக்கும் புதிய வீடியோ ஆல்பம் ‘டேஞ்சர் குயின்’. நடன இயக்குநரும், நடிகருமான சாண்டி, ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தில் அவருடன் பஞ்சாப்பை சேர்ந்த மாடலிங் மங்கையும், நடிகையுமான விசாகா தீமன் நடித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ” டேஞ்சர் குயின் நான் நடிக்கும் இரண்டாவது ஆல்பம். மாஸ்டர் சாண்டியுடன் நடனமாடியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தமிழில் பேச கற்றுக்கொண்டேன். தற்போது தெலுங்கு மொழியையும் கற்று வருகிறேன். என்னிடம் நடந்து கொள்பவர்களின் அணுகுமுறையை பொறுத்து தான் நான் ‘டேஞ்சர் குயினா’க இருப்பேன்’ என்றார்.
இதனிடையே நடிகை விசாகா தீமன் துருவ் விக்ரம் இசையமைத்து வெளியிட்ட ‘காயம்’ எனும் ஒரு நிமிட வீடியோ இசை ஆல்பத்தில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.