விஷால் படப்பிடிப்பில் பயங்கர விபத்து..!சிதறி ஓடியபடக்குழு!!

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியுடன் வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார்

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரித்துவர்மா கதா நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் மும்முரமாக நடந்து வருகிறது.அங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் குழுமி இருந்தனர் .

இந்நிலையில்,இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த போது, எதிர்பாராதவிதமாக படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜெனரேட்டர் வாகனம் ஒன்று திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி அதிவேகமாக பாய்ந்து வந்தது.

இதனை நொடியில் கவனித்து விட்ட படக்குழுவினர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலறியடித்து சிதறி ஓடினர். நல்லவேளையாக . இதில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லாமல் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த விபத்து குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.