சரத்குமார்,அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘போர் தொழில்’!
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி வரும் ‘போர் தொழில்’ எனும் படத்தின் மூலம், இந்தியாவின் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டைட்டிலை அதன் தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். ‘போர் தொழில்’ எனும் தலைப்பு, ‘ஆர்ட் ஆஃப் வார்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.