கல்யாணம் ஆகாமலே கர்ப்பம் ! நடிகை இலியானா பரபரப்பு தகவல் !!
தமிழ் திரையுலகில் கடந்த 2006-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவருக்கு தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் ஏதும் அமையாததால் மீண்டும் டோலிவுட் பக்கம் சென்ற இலியானா, இந்தியிலும் நடித்து வந்தார். 2012-ம் ஆண்டில் மீண்டும் ஷங்கரின் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படம் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுத்தவருக்கு மீண்டும் தமிழ் பட வாய்ப்புகள் குதிரை கொம்பாகவே அமைந்ததால் மீண்டும் தெலுங்கு இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.
தற்போது இந்தியில் ‘அன்ஃபேர் அண்ட் லவ்லி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ என்பவருடன் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்து வந்த இலியானா, கடந்த 2019-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இலியானா, நடிகை கத்ரீனா கைபின் சகோதரர் செபாஸ்டியனை காதலித்து வருவதாகவும்,இருவரும் மாலத்தீவில் ஜோடியாக ‘டேட்டிங்’ செய்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இது குறித்து இலியானா எந்தவித கருத்தும்,மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில்,இலியானா தனது இன்ஸ்டாகிராமில் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றில், குட்டிக் குழந்தையின் டீசர்ட்டில், ‘சாதனைப் பயணம் ஆரம்பமாகிவிட்டது’ என கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது
இன்னொரு புகைப்படத்தில், இலியானா ‘மம்மா’ என்கிற செயினை கழுத்தில் அணிந்தபடி இருக்கிறார் அதற்கு கேப்ஷனாக, ‘விரைவில் வரவுள்ள என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இலியானாவின் இந்தப் பதிவை பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க, நெட்டிசன்களோ, முதலில் உங்கள் கணவர் யார் என்று சொல்லுங்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.