உலகம் முழுவதிலும் தமிழில்….. ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழுவின் புதிய முயற்சி!

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அணி திரண்டு நடித்துள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம்,வரும்,ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.லண்டன், துபாய் என உலகம் முழுவதும் விளம்பரம் செய்யப்படும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷனானது முழுக்க முழுக்க தமிழிலேயே செய்யப்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக உலகம் முழுவதும் ‘பொன்னியின் செல்வன்2’  படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமாக லைக்கா ப்ரொடக்சன் உருவெடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது 

இந்நிலையில் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த சியான் விக்ரம், குந்தவை (திரிஷா), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஆகியோர் ஒன்றாக சந்திக்கும் புகைப்படத்தை   வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் நாவலில் நிறைய மாற்றங்களை மணிரத்தினம் திரைப்படத்திற்காக மாற்றியுள்ளார். அதன்படி இந்த மூவரின் சந்திப்பு இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.