விரைவில் அரசியல்: சத்யராஜ் மகள் அதிரடி அறிவிப்பு! ‘அன்னையர் தினத்தில்’ அப்பாவுக்கும் வாழ்த்து!!
நடிகர் சத்யராஜுக்கு திவ்யா சத்யராஜ்,, சிபிராஜ் என்கிற மகளும், மகனும் உள்ளனர். இதில் சிபிராஜ் தந்தையை போலவே நடிகராக உள்ளார். மகள் திவ்யா (நியூட்ரிஷியன்) ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆர்வம் காட்டிவரும் திவ்யா அன்னையர் தினத்தில் தனது அப்பா சத்யராஜூக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து அவர் பதிவிட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது அப்பதிவில் “எனது எல்.கே.ஜி நாட்களில் இருந்தே சத்யா எனக்கு சிறந்த நண்பர்.
என்னோட க்ரஷ்கள், பிம்பல், PMS பிரச்சனைகள் என அனைத்தையும் அறிந்தவர் .சத்யா என்னை விட மூத்தவர் என்றாலும் (கொஞ்சம் உயரம்தான்😄) என் நினைவுக்கு தெரிந்து 7 வயதில் இருந்து அவரை என் குழந்தையாகவே பார்த்துக் கொண்டு வருகிறேன். உலகிலேயே சிறந்த மனிதனாக இந்த குழந்தை உள்ளது.
எனது வாழ்க்கையின் கடந்த 3 வருடங்கள் மிகவும் பயமாகவும், சவாலாகவும் இருந்தன. நான் கடுமையான ஃபோபியா மற்றும் தூக்கமில்லாத இரவுகளைக் கடந்துவிட்டேன், ஆனால், ஒரு நாளும் என் அப்பா முன்பாக நான் அழுததே கிடையாது. ஒருவேளை நான் அழுதால் , என் அப்பா அதை பார்த்தால் உடைந்து போய்விடுவார்.
எனக்கான பக்க பலமாக அவர் இதுவரை இருந்து வருகிறார். நியூட்ரிஷியனாக இதுவரை என் பணியை ஆற்றி உள்ளேன். விரைவில் அரசியலிலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அரசியலில் களமிறங்கினாலும் எனக்கு என் குடும்பம் தான் எல்லாமே. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் சூர்ய கிரகத்தின் வரிசையைக் கூட மாற்ற முயற்சிப்பேன். வாழ்க்கை கடினமாக இருக்கலாம் ஆனால் கட்டப்பாவுடன் ஒரு காபி குடித்தால் போதும் அது என்னை உற்சாகப்படுத்தி மேலும் நான் முன்னேறி ஓட உதவும். “இவ்வாறு அப்பா பற்றி குறிப்பிட்டுள்ள திவ்யா, அம்மாவை பற்றியும் கூறுகையில்,
“அம்மா எங்கள் வீட்டின் ராணி உலகிலேயே சிறந்த அம்மா என்றே சொல்வேன். அம்மா மற்றும் என் அப்பாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்!” இவ்வாறு திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்