கதறி கதறி அழுத ரைசா வில்சன்…,ஆறுதல் சொன்ன ஜி.வி.பிரகாஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற ரைசா வில்சனுக்கு பெரிய திரையில் கதாநாயகி வாய்ப்பும் தேடி வந்தது ஹரிஷ் கல்யாணுடன் நடித்த பியார் பிரேமா காதல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐஆர் படத்தில்,உளவுப்பிரிவு அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது, ரைசா தற்போது லவ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் அமையாத நிலையில்,அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத ரைசா சமூக வலைதளங்களில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

இதற்காக அவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது தனது கவர்ச்சி படங்களால் இளசுகளை எப்போதுமே சூடேற்றி வந்த ரைசா,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கதறி அழுது அழுது சிவந்த கண்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, “யாரும் தனியாக இல்லை நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம்” என சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது அவருக்கு , எதற்காக இந்த பதிவு என ரசிகர்கள் குழம்பினாலும், எதைப்பற்றியும் கவலைப்படாதீங்க ரைசா. நாங்க எப்பவும் உங்க கூட இருக்கோம் ” என ஆறுதல் கூறி வருகின்றனர் இதற்கிடையே இப்பதிவை பார்த்த ஜி.வி. பிரகாஷ்,”“ உங்களுக்கு அதிகமான அன்பையும், பலத்தையும் அனுப்புகிறேன். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” என்று ஆறுதல் கூறியுள்ளார் நடிகை மஞ்சுமா மோகனும் “இதுவும் கடந்து போகும்.. தைரியமாக இரு” என்று பதிவிட்டு இருக்கிறார்.