மீண்டும் வேட்டையாடி விளையாட வருகிறார் ராகவன் ஐபிஎஸ்!

கடந்த 2006-ம் ஆண்டு  கெளதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி வெற்றிநடைபோட்ட திரைப்படம் “வேட்டையாடு விளையாடு”.  இந்த திரைப்படத்தில் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் மிரட்டி இருந்தார்.
மேலும் ஜோதிகா, பிரகாஷ் ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, ஜானகி சுபேஸ், முமைத் கான், அதுதி சர்மா போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை பலரின் விருப்பப்பட்டியலில் முன்னணி இடம் வகிக்கிறது.
செவென்த் சேனல்  கம்யூனிகேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மாணிக்கம் நாராயணன் இப்படத்தை தயாரித்திருந்தார் . சமீபத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் பிரமாண்டமான காட்சிகளை திரையில் காட்டிய ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிபதிவினை மேற்கொண்டுள்ளார் . இவரது ஒளிப்பதிவு , ஆண்டனியின் படத்தொகுப்பு என அனைத்துமே இப்படத்திற்கு பக்கபலமாக அமைந்தது .
சில படங்களுக்கு மட்டுமே இரண்டாம் பாகம் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருப்பார்கள் . அந்த வகையில் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது .
தற்போது இந்த படத்தை இன்றைய நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி பிலிம் விஷன் K .ராமு டிஜிட்டல் முறையில் ரீ மாஸ்டர் செய்துள்ளார் .YMR கிரியேஷன்ஸ் நிறுவனம்  வருகின்ற ஜூன் மாதம் KM சுந்தரம் பிக்சர்ஸ் நிறுவனம் மீனாட்சி சுந்தரம் மூலமாக தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். .
இதற்கான உருவாக்க பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது .