பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான ‘பானிபூரி’!
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப் கான்செப்ட்டை மையமாக கொண்ட புதிய இணையத்தொடரை உருவாக்கி வருகிறார். இந்தத் தொடருக்கு ‘பானி பூரி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சேர்ந்து வாழும் இரு நபர்களுக்கு இடையில் இருக்கும் லிவ்- இன் உறவு குறித்து ஆராய்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவு தலையீடும் குறுக்கிடுவதால் என்ன ஆகிறது என்பது குறித்தும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Related Posts
செஇத்தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா மற்றும் வினோத் சாகர், ஸ்ரீகிருஷ்ண தயாள்,கோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் ஒளிப்பதிவை பிரவீன் பாலு கவனிக்க, நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார்.
இதன் ஒளிப்பதிவை பிரவீன் பாலு கவனிக்க, நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார்.
இந்தத் தொடரை ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. தமிழ் ஓடிடியான ஷார்ட்ஃபிலிக்ஸில் இது (Shortflix) ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.