‘ராஜா கிளி’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள புதிய படம் ‘ராஜா கிளி’. இதில் கதாநாயகனாக சமுத்திரக்கனி நடிக்க,கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்
இப்படத்தின் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா.மேலும் நடிகர் தம்பி ராமையா இந்த படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து உள்ளதுடன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஆடுகளம் நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், சுவேடா ஷ்ரிம்டன், சுபா தேவராஜ், தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், சாட்டை துரைமுருகன், கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Related Posts
சாட்டை, அப்பா, வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இப்படம் உருவாகிறது. இப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப்படம் சமீபத்தில் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.இப் படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை; கோபிநாத் ,கேதார்நாத் ஆகியோர் கவனிக்க, பின்னணி இசையை சாய் தினேஷ் கவனித்துள்ளார்