நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘இந்தியன் ஃபிலிம்’ சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் சுகுமாறன்., ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர் : இதுவரை இந்தியாவில் தயாரான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படங்களில் ‘சலார் பகுதி 1’ முன்னிலையில் இருக்கிறது. ‘பாகுபலி’ மற்றும் ‘கேஜிஎஃப்’ தொடர் போன்ற புகழ்பெற்ற பிளாக் பஸ்டர்களுக்கு இணையாக இப்படம் உள்ளது.
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலும், அதனை சுற்றிலும் பிரம்மாண்டமான 14 திறந்த வெளி மற்றும் உள்ளரங்க அரங்கங்கள் நிர்மாணிக்கப்பட்டு, வெள்ளித்திரையில் இதுவரை பார்த்திராத வகையில் பிரம்மாண்ட காட்சிகளை இந்த படம் வழங்கவிருப்பதாக உறுதியளிக்கிறது.