நந்தமுரி கல்யாண்ராம் தனது திரையுலக பயணத்தின் தொடக்கத்திலிருந்தே தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவர், ‘டெவில்’ படத்தின் மூலம் மற்றொரு சுவாரஸ்யமான திரைக்கதையைக் கொண்டு வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் ‘டெவில்’ என பெயரிடப்பட்ட இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் ‘பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்’ என்ற கவர்ந்திழுக்கும் வாசகத்துடன் திரைக்கு வருகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்தது. நந்தமுரி கல்யாண் ராம் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ‘டெவில்’ பற்றிய பிரத்யேக காணொளியை வெளியிட்டனர். இதில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இந்த காணொளியில்
‘டெவில்’ என்ற கொடூரமான மற்றும் புத்திசாலித்தனமான நபர் ஒருவர் திடமான எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்படுகிறார். “சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் டெவில் என்று ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் இருந்தார்.” என்று குரல் ஒலிக்கிறது. நந்தமுரி கல்யாண் ராம் அசத்தலாகத் தோன்றி, ஒரு நல்ல ஏஜென்ட் எப்படி இருக்க வேண்டும்? என்பதைப் பற்றிய உரையாடலைப் பேசுகிறார்.
கல்யாண் ராம் பொருத்தமான ரகசிய உளவாளி போல தோற்றமளிக்கிறார், பார்வையாளர்களால் அவருடைய கதாபாத்திரத்தை மட்டுமே உணர முடிகிறது. கல்யாண் ராம் என்ற நடிகராக அல்ல. ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிகை சம்யுக்தா மேனனின் தோற்றம்.. என அனைத்தும் தனித்துவம் பெற்று நிற்கிறது.
இயக்குநர் நவீன் மேதாராம் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘டெவில்’ திரைப்படத்தில் நந்தமுரி கல்யாண்ராம், சம்யுக்தா மேனன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீகாந்த் விஸா எழுதியிருக்க, எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை தம்மிராஜு கவனித்திருக்கிறார். பீரியட் டிராமா ஜானரில் பிரம்மாண்டமான ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அபிஷேக் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அபிஷேக் நாமா தயாரித்திருக்கிறார்.இதனை தேவன்ஷ் நாமா வழங்குகிறார்.
‘டெவில்’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறது.