அமெரிக்காவில் 40 ஆண்டு கால நண்பருடன் கமல்!
கமல்ஹாசன் நடித்த ’இந்தியன்’ ’அவ்வை சண்முகி’ ’தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் மேக்கப் கலைஞராக பணியாற்றியவர் ஹாலிவுட் மேக்கப் கலைஞர் மைக் வெஸ்ட்மோர்.
கமலின் நெருங்கிய நண்பரான இவர் சமீபத்தில் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் புரமோஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற மேக்கப் கலைஞர் வெஸ்ட்மோர் உடனான 40 ஆண்டு கால நட்பை கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.