‘ஓடிடி’ தளம் தொடங்கிய நடிகர் ஜெய் ஆகாஷ்!
மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் தயாரித்துள்ள புதிய படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி சுரேஷ், குஷி மற்றும் , சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜூபின் இசை அமைக்கிறார். சாய் பிரபா மீனா இயக்கியுள்ளார் இப்படம் முதன்.முறை யாக ஒரே நேரத்தில் ஜூலை 28ம் தேதி தியேட்டர் மற்றும் A கியூப் மூவிஸ் ஆப் (A qube Movies App )ஒ டி டி தளத்தில் வெளியாகிறது.
இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது:”ஒரே நேரத்தில் சினிமா தியேட்டரிலும், ஒ டி டி யிலும் யோக்கியன் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகிறது.அதுவும் என்னுடைய ஏ கியூப் மூவிஸ் ஆப்பில் முதன் முறையாக வெளியாகிறது.
என்னுடைய உதவி இயக்குனர் சாய் பிரபா மீனா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறேன். எந்தவொரு படமும் மக்களிடம்.கொண்டு சென்று சேர்வதற்கு தியேட்டர்கள் தேவை
. ஆனால் இப்போது தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு மட்டுமே படம்.பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவ தில்லை.அவர்களை குற்றம் சொல்ல முடியாது.
தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான் ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். கெட்ட போலீஸ் அதிகாரியின் மகன் எப்படியிருக்கிறான் என்பதை இப்படம் மையமாக கொண்டு இக்கதை உருவாகி யுள்ளது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிப்பேன் என்பதை இப்படத்தில் காணலாம்”.இவ்வாறு ஜெய் ஆகாஷ் கூறினார்.