‘ஜவான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்!

 ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்டவர்கள் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது ஜவான் திரைப்படம், அட்லீ இயக்கியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் வெளியாகவுள்ளது.நடிகர் ஷாருக்கானின் பதான் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில்,அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளது 

 அனிருத் இந்தப் படத்தின்மூலம்  இசையமைப்பாளராக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் இந்த மொழிகளில் வெளியானது. ஷாருக்கானின் இன்ட்ரோ சாங்காக இந்தப் பாடல் அமைந்திருந்தது. தமிழில் இந்தப் பாடலை அனிருத்தே பாடியிருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் -நயன்தாராவின் மெலடி பாடல் ஒன்றும்  வெளியாகவுள்ளதாம் இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் அடுத்த போஸ்டரை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷாருக்கான், பயங்கரமான கேரக்டர் என தெரிவித்துள்ளார்.