லோகேஷ் கனகராஜ் கூறிய ரோலக்ஸ் கதை!-சூர்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவின் இரண்டு கேரக்டர்களும் நெருப்பாக இருக்கும் எனக்கூறியுள்ளார்
முன்னதாக வெளியான இப்படத்தின் ப்ரோமோ மற்றும் டைட்டில் டீசரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தின் வரலாறு கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்து விடும் என்கிறது படக்குழு. இப்படத்தை தொடர்ந்து சூர்யா,சுதா கொங்கரா இயக்கத்திலும் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்திலும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்நிலையில் சூர்யா ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் இதில் அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சூர்யா தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இச் சந்திப்பின் போது,”விக்ரம் படத்தில் சில நிமிடங்களே வந்து போன ரோலக்ஸ் கேரக்டரை தனி படமாக எடுக்கவுள்ளதாகவும், லோகேஷ் கூறியுள்ள கதை தன்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சூர்யா,அடுத்ததாக இரும்புக்கை மாயாவி படத்திலும் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.