மார்க் ஆண்டனி படத்துக்கு நீதிமன்றம் தடையா ? தயாரிப்பாளர் விளக்கம் !

விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யூஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் ,இப்படத்தின் 150 நிமிடங்கள் ரன்னிங் டைம்  2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தெரியவந்துள்ளது.

 ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  உருவாகி உள்ள இந்த படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா, சுனில், செல்வராகவன், ரிதுவர்மா, அபிநயா, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார்

இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இணையதளங்களிலும், சில தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியானது.

லைகா நிறுவனத்துக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடி ரூபாயை நடிகர் விஷால் நீதிமன்றத்தில் செலுத்தாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

கோபுரம் பிலிம்ஸின் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார். இதன் மூலம் அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா புரொடக்சன் நிறுவனம் ஏற்று செலுத்தியது. இந்தக் கடனை நடிகர் விஷால் லுத்தவில்லை என லைகா வழக்கு தொடர்ந்தது.

முன்பு விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பட வெளியீட்டுக்கு முன்பும் இப்படியான சிக்கலை லைகா நிறுவனம் விஷாலுக்கு கொடுத்தது. தற்போது ‘மார்க் ஆண்டனி’ வெளியீட்டிற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், இந்த செய்தியில் உண்மையில்லை என்று தயாரிப்பாளர் வினோத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.