பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் ‘லால் சலாம்’!

லைகா புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனத்தின்  அடுத்த வெளியீடாக ‘லால் சலாம்’ திரைப்படம் தயாராகி வருகிறது.

 ‘லால் சலாம்’ படத்தின் மூலம்  மூன்றாவது முறையாக இயக்குனர்  பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’..

இப்படத்தில்நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க,
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில்   நடித்துள்ளார்.  படத்தில் இருந்து  ‘மொய்தீன் பாய்’அவரது கேரக்டர் போஸ்டர் பார்வையாளர்களிடமிருந்து  வரவேற்பைப் பெற்றது
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்,

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம்
திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறதுஇது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஜி.கே.எம். லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு வெளியிட்டுள்ளது.