பிரம்மாண்ட ‘கட் அவுட்’: பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்!!

பான் இந்திய நட்சத்திர நடிகரான ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வித்தியாசமான முறையில் பிரம்மாண்ட கட் அவுட்டை வைத்து கொண்டாடினர்.

பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஹைதராபாத்தில் உள்ள குகபள்ளி எனும் இடத்தில் ஒன்று திரண்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரபாஸின் பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் மற்றும் பூக்கள் தூவி பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர். அதன் போது அங்கு ஒன்று கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரபாஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸின் பிறந்த நாளிற்கு இந்திய திரையுலக பிரபலங்களும், முன்னணி நட்சத்திர நடிகர்களும், ரசிகர்களும் சமூக வலைதளத்தின் மூலமாக வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று ‘சலார் பார்ட் 1 சீஸ்ஃபயர்’ வெளியாகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் ‘கல்கி 2898AD’ ,’ மற்றும் ‘ஸ்பிரிட் ‘ ஆகிய பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் பான் இந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்டுடன் கொண்டாடியது ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.