‘இ.கம்யூ’ கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் உருவாகும் “அரிசி”!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் “அரிசி” .இப்படத்தை மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில்பி.சண்முகம் தயாரித்து வருகிறார்.
இதில், இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ்,மகிமை ராஜ்,வையகன்,அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் இணைத்ததயாரிப்பைமகேந்திர பிரசாத் ஏற்றுள்ளார்.
இப்படத்தை பிரபல இயக்குனர்களிடம் பணியாற்றியஎஸ்.ஏ.விஜயகுமார் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ. விஜயகுமார் கூறியதாவது: “அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம்.அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல!மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த *”அரிசி”* படத்தின் சிறப்பு!
இப்படத்தில் விவசாயியாக நடித்திருக்கும் தோழர் இரா. முத்தரசன்அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இப்படத்தில் அப்பகுதி விவசாயிகளும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது