1975 -ல் மதுரையில் நடக்கும் கதை! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படத்தினை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, “1975 -இல் காலகட்டத்தில் நடப்பதாக இதன் கதைக்களம் சித்தரிக்கப்பட்டுள்ளது. எனக்கும் சினிமா இயக்குனர் ஆன எஸ்.ஜே .சூர்யாவுக்கும் இடையே நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களே இந்த படத்தின் கதை கருவாக்கப்பட்டுள்ளது இதில் வித்தியாசமான கெட் அப்பில் , மதுரை லாங்குவேஜ் பேசி நடித்துள்ளேன்.
நானும் ஒரு இயக்குனர் தான் என்றாலும், என்னை இயக்கும் இயக்குனர்கள் இயக்குனரின் பேச்சை மீறி செயல்பட்டதில்லை இந்த படத்தில் நானும், எஸ் ஜே சூர்யாவும் போட்டி போட்டு நடித்துள்ளோம். இப்படத்தில் எங்கள் இருவருக்கும் அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை எங்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்துள்ளார்
. இப்படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் உருக்கமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். ‘முனி’ படத்தின் ஐந்தாம் பாகம் கதையை தற்போது உருவாக்கி இருக்கிறேன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ரஜினி படத்தில் நான் வில்லனாக நடிக்க உள்ளதாக பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை. ஆனால் லோகேஷ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.