“கோழிப்பண்ணை செல்லதுரை”!

ஜோ” படத்தை தொடர்ந்து “விஷன் சினிமா ஹவுஸ்” டாக்டர்  டி.அருளானந்து  தயாரித்துள்ள புதிய படம் “கோழிப்பண்ணை செல்லதுரை”இப்படத்தை தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கிய சீனு ராமசாமி எழுதி இயக்கி வருகிறார்.

இதில்,கதையின் நாயகனாக  ஏகன் அறிமுகமாகிறார்.பிரிகிடா,ஐஸ்வர்யா தத்தா,தினேஷ் முத்தையா லியோ சிவகுமார்,திருச் செந்தூர் ஶ்ரீ ராம் ,சத்யா,மானஸ்வி,பவா செல்லதுரை உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதில், முக்கிய கதாபாத்திரத்தில் “யோகி” பாபு நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறுகையில், ‘கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படமாக உருவாகி வருகிறது என்கிறார். .இப்படத்தின் ஒளிப்பதிவை  அசோக்ராஜ் கவனிக்க, பிரபாகர்,சீனு ராமசாமி இருவரும் இணைந்து இப்படத்தின் வசனத்தை எழுதியுள்ளனர். என் ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார்.