ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் : மாற்றம் பிறக்கட்டும் ,மக்கள் மகிழ !

துயரங்களும் ,சோதனைகளுமாக கடந்த 2023- ஆம் ஆண்டினை இந்திய ஒன்றியமும் ,குறிப்பாக தமிழநாடும் அனுபவித்தன. 

ரயில் விபத்துகள், நிலநடுக்கம் ,நிலச் சரிவு ,இயற்கை பேரிடர் , தீ விபத்து, விவசாயிகள் போர் என  பல கொடுமைகளை மக்கள் அனுபவித்தனர். உயிரிழப்பு பரவலாக இருந்தது. 

விலைவாசி உயர்வு ,ஜி. எஸ். டி . வரிவிதிப்பு ,பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உணவுப் பொருள் பற்றாக்குறை என சாதாரண மக்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். 

குபேரர்களின்  சதவிகிதமும் உயர்ந்தது  ,ஏழைகளின் சதவிகிதமும் உயர்ந்தது. சமதர்ம இந்தியாவின் கனவும் தகர்ந்தது . இப்படியாக கடந்த 2023 -ஆம் ஆண்டு அராஜக அரசியலை ஆரோக்கியமாக வளர்த்து விட்டு கடந்திருக்கிறது. 

புதிய ஆண்டு ( 2024 ,)ஏழைகளுக்கு புதிய வாழ்க்கையை  அமைத்துத் தருமா ?

மக்கள் மகிழும் மாற்றம் நிகழுமா ?

இருப்பதாக சொல்லப்படுகிற எல்லாக் கடவுள்களையும் வேண்டுவோம்.