ஷாம் கதாநாயகனாக நடிக்கும் ‘அஸ்திரம்’ !

பெஸ்ட் மூவிஸ் சார்பில்  தன சண்முகமணி தயாரிப்பில் ,  ஷாம் கதாநாயகனாக நடிக்கும்  புதிய படத்திற்கு ‘அஸ்திரம்’ எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக மாடலிங் துறையைச் சேர்ந்த நிரஞ்சனி நடிக்க, முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை கல்யாண் கவனிக்க,சுந்தரமூர்த்திஇசையமைக்கிறார். 
இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வம்சி நடிகர்கள் கிச்சா சுதீப், ஆர்யா, சாயேஷா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட திரை பிரபலங்கள் வெளியிட்டனர்.

இப்படம் குறித்து இயக்குநர் அரவிந்த் ராஜகோபால்  கூறும்போது, “கொரோனா காலகட்டத்தில் 30 நிமிடம் கொண்ட ஒரு பைலட் ஃபிலிம் ஆக இதை உருவாக்கும் வேலைகளில் இறங்கினோம். கதை நன்றாக இருக்கவே இதை திரைப்படமாக மாற்ற முடிவு செய்தோம்.  இதன் கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். இந்த படம் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது.

இதில்  நடிகர் ஷாம்  போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ராட்சசன்’, ‘போர் தொழில்’ பாணியில் இந்தப் படமும் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது. கொடைக்கானல் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது விரைவில் இப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.