அரசியல்வாதி பெயரில் ஒரு அறிவுக்கெட்ட முட்டாள்!=விஷால் குஷ்பு ஆவேசம் !!

சேலம் மேற்கு அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு என்பவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை திரிஷா,”பிரபலம் ஆக வேண்டும் என எந்த அளவுக்கும் கீழே இறங்குபவர்களை பார்க்க அருவருப்பாக இருக்கிறது. நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி சொல்ல வேண்டியது அனைத்தையும் என் சட்ட ஆலோசகரிடமிருந்து  வரும்” என  கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தில் நடிகை கஸ்தூரி, இயக்கநர் சேரன், மன்சூர் அலிகான், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட  திரையுலகை சேர்ந்த பலரும்  கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். “உண்மையில், தங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த பெண்ணை அவர்கள் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ஒரு பெண்ணுக்குப் பிறந்த எந்த ஆணும் இப்படிப்பட்ட வெட்கக்கேடான மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார்கள்.’ என்று அவர்  குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நடிகர் விஷால் தனது  டுவிட்டர் பக்கத்தில்,” அரசியல்வாதி என்கிற பெயரில் உள்ள ஒரு அறிவுக்கெட்ட முட்டாள் பேசியதை இப்போது தான் பார்த்தேன். என்னவொரு மூடத்தனம். நடிகர்கள் என்றால் என்னவெல்லாம் பேசலாமா? கொஞ்சமாவது பொறுப்புணர்வு இல்லாமல் அரசியலில் என்ன பண்ணிட்டு இருக்க, உன்னுடைய பெயரையோ பாதிக்கப்பட்ட நபரின் பெயரையோ குறிப்பிடப் போவதில்லை. அதை நான் செய்து உனக்கு மேலும், பப்ளிசிட்டி ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், நீ செஞ்சிருக்க காரியம் எவ்வளவு மோசமானது என்று உனக்குப் புரிய வரும். அதற்கான பின் விளைவுகளை நிச்சயம் நீ அனுபவிப்பாய் உனக்கு இங்கே நான் எந்தவொரு கண்டனமும் தெரிவிக்கப் போவதில்லை. கண்டிப்பா உனக்கு நரக வேதனை உன்னோட பேச்சுக்காக கிடைக்கும். இதை நான் ஒரு நடிகர் சங்க உறுப்பினராக எல்லாம் சொல்லவில்லை. ஒரு மனிதனாக சக நடிகருக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்து வேதனைப்படும் மனிதனாக பதிவிடுகிறேன் என நடிகர் விஷால்  மிகவும் கடுமையாக பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவாகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஏ.வி.ராஜு மன்னிப்பு கோரியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது,  “ சமூக வலைதளங்களில் சிலர் என் மீது அவதூறான ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த செய்தியை எந்த இடத்திலும் சொல்லவில்லை, அந்த செய்தியை சம்பந்தப்பட்ட நபர் நபர் ஒருவர் சொன்னதாக சொன்னார், அதனால், நான் மீண்டும் அவருடைய பெயரை சொல்ல விரும்பவில்லை. அது அருவறுப்பாக இருக்கிறது. இன்னொன்று, நான் அந்த அம்மாவைப் பற்றி நான் எந்த இடத்திலுமே விமர்சனத்துக்கு கொண்டு வரவில்லை. நான் மற்ற இடத்தில் பேசும்போதுகூட, இவர்கள் சம்பந்தமே இல்லை.  எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக காழ்ப்புணர்ச்சி இருந்ததே ஒழிய, நான் எந்த இடத்திலேயும் திரைப்பட நடிகையயோ, மற்ற யாரையும் சொல்லவில்லை.  இது தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது அப்படி என்று எனக்குத் தெரியவில்லை. திரைப்பட இயக்குனர் சேரனுக்கும், ஆர்.கே. செல்வமணிக்கும் மற்றும் திரிஷா அம்மாவுக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள். ஒருவேளை, உங்களுடைய மனது புண்படும்படியாக இருந்திருந்தால், நான் சமூகவலைதளம் மூலமாக என்னுடைய மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.