ராம்சரணுடன் இணையும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு !
இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ராம்சரண் நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந் நிலையில் ரம்சரன் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் புச்சிபாபு இயக்க உள்ளார்/இப்படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் தான் இசையமைக்க உள்ளார் இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேம் சேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்த தகவலை இயக்குனர் புச்சிபாபு தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தமிழில் ‘சேது’, ‘நந்தா’, ‘பகவதி’, ‘ஜெயம்’, ’வாரணம் ஆயிரம்’ ’எந்திரன்’ ’லிங்கா’ ’எதற்கும் துணிந்தவன்’ ’இந்தியன் 2’ உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.